அமைச்சரவை மாற்றத்திற்கும் கொள்கலன் விடுவிப்பு விசாரணைக்கும் தொடர்பில்லை
இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் இந்த ஆண்டு ஆரம்பத்தில் 323 கொள்கலன்கள் சர்ச்சைக்குரிய முறையில் விடுவிக்கப்பட்டது தொடர்பான விசாரணைகளுக்கும், அண்மைய அமைச்சரவை மாற்றத்திற்கும் இடையே தொடர்பு கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரும் அமைச்சரவ பேச்சாளருமான நாலிந்த ஜயதிஸ்ஸ, இந்த விடயத்தை தெரிவித்துள்ளர்ர். அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பதவி மாற்றம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் 14 தடவகைள் கொள்கலன் விடுவிக்கப்பட்ட விவகாரம் மற்றும் அண்மையில் விடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை அமைச்சரவை மாற்றங்களுடன் தொடர்புடையவை அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒரு வருடமாக இந்த அமைச்சுக்களை நிர்வகித்து வருவதாகவும், இப்போது அவற்றின் செயல்பாடுகள் குறித்து தெளிவான புரிதல் உள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்கத்திற்கு இப்போது தனது வரவு செலவுத்திட்டத்தை தயாரித்து, அதன் கொள்கைகள் மற்றும் உத்திகளை செயல்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை மாற்றம் இந்த பரந்த மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாகும் என நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கியுள்ளார்.
பரந்த நோக்கங்கள் கொண்ட சில அமைச்சுக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, நிர்வாக திறனை மேம்படுத்துவதற்காக துணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam
