யானையுடன் பேருந்து மோதி விபத்து: 4 பேர் வைத்தியசாலையில்
தனியார் பயணிகள் பேருந்து ஒன்று யானையுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தானது, இபலோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹயிலுப்பல்லம விதை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கெகிராவையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
விதை ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இருந்த காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்கு செல்வதற்காக வேலியை உடைத்துக்கொண்டு வீதிக்கு வந்தபோது இந்த பேருந்துடன் மோதியுள்ளது.
மேலும், விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சாரதி, நடத்துனர் உள்பட 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
