கிண்ணியாவில் தனியார் பேருந்தும் கனரக வாகனமும் மோதி விபத்து!
கிண்ணியா - ஆயிலியடி பகுதியில் தனியார் பேருந்தும் கனரக வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்றையதினம்(29) இடம்பெற்றுள்ளது.
ஆயிலியடி பகுதியில் இருந்து கிண்ணியா நோக்கி சென்ற பேருந்து மீது கனரக வாகனம் மோதியே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
ஆயிலியடியிலிருந்து கிண்ணியா நோக்கி புறப்பட்ட பேருந்து சூரங்கல் அல் அமீன் பாடசாலைக்கு முன்னால் உள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றும் வேளையில், பின்னாலிருந்து வந்த கனரக வாகனம் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் இவ்விபத்து ஏற்பட்டிருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளதுடன் பயணிகள் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை.
மேலும், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விஜய் நள்ளிரவில் திடீர் வெளியேற்றம்! கரூரில் திக்... திக் நிமிடங்கள்... சிக்கப்போகும் முக்கிய புள்ளி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



