மகிந்த - ரணில் காலத்தில் கூட நடக்காத செயற்பாடு! பகிரங்கமாக புகழ்ந்த நாமல் ராஜபக்ச
அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வடக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகள் தொடர்பில் கதைப்பதோடு எதிர்க்கட்சியின் பெரும் பங்கிற்கு தனி ஆளாக குரல் கொடுக்கிறார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,''அரசியலில் அர்ச்சுனா எம்.பியின் தலைவர் பிரபாகரன் எனது தலைவர் மகிந்த ராஜபக்ச . ஆனால் அவர்கள் இருவரும் ஒத்துப்போக மாட்டார்கள்.
ஆதலால் எனது தலைவர் அவரின் தலைவருக்கு எதிராக யுத்தம் செய்தார். இருப்பினும், அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வடக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகள் தொடர்பில் கதைப்பதோடு எதிர்க்கட்சியின் பெரும் பங்கிற்கு தனி ஆளாக குரல் கொடுக்கிறார்.
அவ்வாறான ஒருவருக்கு பிரச்சினை ஒன்று ஏற்பட்டால் அதற்கு நாம் முன்னிலையாக வேண்டும்.எனது தலைவரின் கொள்ளை யாவருக்கும் கருணை கொள்வதாகும்.அதையே நானும் பின்பற்றுகிறேன்.''என்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ....

விஜய் நள்ளிரவில் திடீர் வெளியேற்றம்! கரூரில் திக்... திக் நிமிடங்கள்... சிக்கப்போகும் முக்கிய புள்ளி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



