பேருந்தும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் பலி - நான்கு பேர் வைத்தியசாலையில்
மொனராகலை - வெடிகும்புர வீதியில் பேருந்தும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை (28) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேருக்கு நேர் மோதி கோர விபத்து
முச்சக்கர வண்டியில் பயணித்த 8 வயது சிறுமி மற்றும் ஒரு பெண் உட்பட நான்கு பேர் விபத்தில் படுகாயமடைந்து மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த அலியாகத்த பகுதியை சேர்ந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மொனராகலையிலிருந்து வெடிகும்புரத்தை நோக்கி வந்த முச்சக்கர வண்டி வெடிகும்புரத்திலிருந்து மொனராகலையை நோக்கிச்சென்ற பயணிகள் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக மொனராகலை போக்குவரத்துப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
தீவிர புயலாக வலுப்பெற்று இந்தியாவை கடந்த அர்னாப் சூறாவளி! இலங்கைக்கான பாதிப்பு தொடர்பில் வெளியான தகவல்