பாகிஸ்தானில் பேருந்து விபத்து : 17 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்தில் இன்று (25) இடம்பெற்ற இரண்டு பேருந்துகள் கொடூர விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மர்தான் மாவட்டத்தின் பிரதான வீதியொன்றில் இயந்திரக் கோளாறு காரணமாக பேருந்து ஒன்று வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்தது.
விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு
இதன்போது, அதே வீதி வழியாக அதிவேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு பேருந்து, வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறமாக எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரு பேருந்துகளும் பலமாக மோதிக்கொண்ட இந்த விபத்தில், பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.