இரு பேருந்துகள் மோதி விபத்து: 7 மாணவர்கள் காயம் - செய்திகளின் தொகுப்பு
இரண்டு பேருந்துகள் மோதி இடம்பெற்ற விபத்தில் 7 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணையிலிருந்து மஹரகம நோக்கி செல்லும் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (03.11.2023) காலை குறித்த இடம்பெற்றுள்ள நிலையில், விபத்தில் காயமடைந்த மாணவர்கள் ஹொரண ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹொரணையிலிருந்து மஹரகம நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் ஹொரணையிலிருந்து குடா உடுவ நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதிகள் இருவரையும் ஹொரணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,





உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam
