மாதகல் கடற்பரப்பில் இரண்டு வெவ்வேறு இடங்களில் கஞ்சா மீட்பு : பொலிஸார் தீவிர விசாரணை (Video)
புதிய இணைப்பு
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் 276 கிலோ எடையுடைய கேரளா கஞ்சாவுடன் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது இன்று காலை 7.30 மணியளவில் மாதகல் பகுதியைச் சேர்ந்த இருவர் கஞ்சா கடத்தி வந்தவேளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களிடமிருந்து டிங்கி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்கள் இளவாலை பொலிஸாரிடன் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
கடலில் மிதந்த கஞ்சா மூடைகள் : பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கிராம் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாக்களை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு எடுத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

