கனடாவின் டொரொண்டோவில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்.. பலரின் நிலை கவலைக்கிடம்
கனடா - டொரொண்டோவில் உள்ள நோர்த் யார்க் (North York) பகுதியில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பில் ஏழு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த நான்கு பேரின் நிலை மிகக் கவலைக்கிடமாக உள்ளது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாயு வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தீயணைப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகாரிகளின் தகவல்
இருப்பினும், குழு சென்ற போது கட்டிடத்தில் தீ இல்லை என டொரொண்டோ தீயணைப்பு சேவை அதிகாரி பால் ஓ’பிரையன் தெரிவித்துள்ளார்.
வெடிப்பு கட்டிடத்தின் 22ஆம் மாடியில் உள்ள பென்ட்ஹவுஸ் மெக்கானிக்கல் அறையில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதில் இருந்த நான்கு தொழிலாளர்கள் தீவிர காயங்களுடன், மேலும் மூன்று பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டொரொண்டோ தீயணைப்பு துறையிலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன.
கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணகைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
