விதிக்கப்பட்டுள்ள மறைமுக வரி! பசிலின் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்
அரச பணியாளா்களின் ஓய்வூதியக் காலத்தை 65ஆக உயா்த்தும்போது இளைஞா் யுவதிகள், அரச சேவைக்குள் உள்வாங்கப்படுவது நிறுத்தப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தொிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் ஜேசி அலவத்துவல இதனை தொிவித்துள்ளாா்.
செய்தியாளா் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற அவா், அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022 வரவுசெலவுத்திட்டம், பயனற்ற வரவுசெலவுத்திட்டம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
இது அரசாங்கம், தமது நண்பா்களை காப்பதற்காக கொண்டு வந்த வரவுசெலவுத்திட்டமாகும் என்றும் அவா் கூறியுள்ளாா்.
இதன் காரணமாகவே, மத்திய வங்கியினால் அச்சிடப்பட்ட பெருந்தொகை பணத்தை, கிராமசேவையாளா் மட்டத்திலும் தொகுதி மட்டத்திலும் செலவிட அரசாங்கம் தீா்மானித்துள்ளதாக அலவத்துவல சுட்டிக்காட்டியுள்ளாா்.
வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்தினால் நேரடி வாிகள் விதிக்கப்படவில்லை. மாறாக மறைமுக வாி விதிக்கப்பட்டுள்ளது,
இது இறுதியில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்து மக்கள் மீதே சுமையை ஏற்படுத்தும் என்றும் அலவத்துவல தொிவித்துள்ளாா்.