2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் கடந்த வெள்ளிக்கிழமை சபையில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான விவாதங்கள் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.
குறித்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாக, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிகள் தொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் விமர்சன ரீதியான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வரவு செலவுத் திட்டம் தொடர்பான இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போது கூறப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு இதோ,
சித்தார்த்தன்
நாடு இன்று எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறது, எப்போது வெடித்து சிதறுமோ தொியாது என்று 1972ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தொிவித்த கருத்து, இன்றே மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (Tharmalingam Sitharthan) தொிவித்துள்ளார். நாடு அதாள பாதாளத்துக்கு சென்று கொண்டிக்கிறது. அத்துடன் பஞ்சம் ஏற்பட்டு விடுமோ என்று மக்கள் இன்று அஞ்சி கொண்டு இருக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
|
அருந்திக்க பொ்ணான்டோ
2022 பாதீட்டில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில், இறக்குமதியை முன்னிலைப்படுத்தும் பாதீடுகளே முன்வைக்கப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பொ்ணான்டோ (Arundika Fernando) தொிவித்துள்ளாா். அரச சேவையை முன்னைய அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கமே சிறப்பாக ஊக்குவித்து வருவதாக அவா் குறிப்பிட்டுள்ளாா். |
திஸ்ஸ அத்தநாயக்க
வாழ்க்கைச் செலவு தொடா்பில் 2022 பாதீட்டில் எந்த யோசனை முன்வைக்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் திஸ்ஸ அத்தநாயக்க(Tissa Atanayakke) தொிவித்துள்ளாா். இந்த பாதீட்டின் மூலம், கடந்த ஒன்றரை வருடங்களுக்குள் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளமையை நிதியமைச்சா் பசில் ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா். எனவே மக்களை கடவுளே காப்பாற்றவேண்டும் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்
|
வாசுதேவ நாணயக்கார
அரசாங்கம் அழிந்துப்போனாலும், மக்களை அழிக்கும் நோக்கில், சா்வதேச நாணய நிதியத்திடம் செல்லப்போவதில்லை. சா்வதேச நாணய நிதியத்திடம் செல்வது சிறைக்கு செல்வது போன்றது என்று அமைச்சா் வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara) தொிவித்துள்ளார். இந்தநிலையில் இலங்கையில் கொரோனாவுக்கு மத்தியில் பல நிறுவனங்கள் அதிக இலாபங்களைப் பெற்றுள்ளன. எனவே இந்த நிறுவனங்களிடம் இருந்து பாதீட்டின் மூலம் வாி அறவிடப்படுவதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.
|
|