பௌத்த விழுமியங்களை சமூகத்தின் அடித்தளமாக மாற்றுமாறு பிரதமர் வலியுறுத்து!
உன்னதமான பௌத்த விழுமியங்களை சமூகத்தின் அடித்தளமாக மாற்றி அமைக்க முடியுமாயின் அமைதியான, நீதியான சுபீட்சமானதொரு இலங்கையை இலகுவாகக் கட்டியெழுப்ப முடியும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் ஸ்ரீ சம்புத்த சாசனத்தை ஸ்தாபித்த மஹிந்த தேரரின் வரலாற்றுச் சிறப்புமிக்க தர்மதூதுப் பணியை நினைவுகூரும் உன்னதமான பொசொன் பௌர்ணமி தினமானது, ஆன்மீக புரிதல், ஞானம் மற்றும் சமூக சமத்துவத்தை எமக்கு ஞாபகமூட்டும் மிகவும் உன்னதமானதொரு தினமாகும்.
பொருளாதார முன்னேற்றம்
பொசன் பௌர்ணமி என்பது இலங்கை வரலாற்றில் மதம்சார்ந்ததொரு நிகழ்வு மாத்திரமல்ல, அது நம் தேசத்தின் சிந்தனை, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும்.

மஹிந்த தேரரின் இலங்கை வருகையினால் இந்த நாட்டிற்குப் பரிசாகக் கிடைத்த பௌத்த தத்துவமானது, பல நூற்றாண்டுகளாக எமது தேசிய அடையாளத்தை வடிவமைத்துவரும் ஒரு விலைமதிப்பற்ற பாரம்பரியமாக மாறியுள்ளது.
இன்று எமது நாடு புதிய எதிர்பார்ப்புகளுடன் கூடியதொரு புதிய பாதையொன்றை அடைந்துள்ளது. அந்தப் பயணத்தை வெற்றிகொள்ள பொருளாதார முன்னேற்றம் மாத்திரமல்லாது, ஒழுக்க விழுமியங்களால் செழுமைப்படுத்தப்பட்ட சமூகமும் அவசியமாகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam