புனித தந்த தாதுவை வரிசையின்றி பார்வையிட பெருந்தொகை அறவிடும் பௌத்த பீடங்கள்
கண்டி தலதா மாளிகையில் காட்சிப்படுத்தப்படும் புனித தந்த தாதுவை வரிசைகளில் காத்திருக்காது தரிசிக்க பௌத்த பீடங்களின் தரகர்கள் மூலம் பெருந்தொகைப் பணம் அறவிடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கண்டி தலதா மாளிகையில் கௌதம புத்தரின் புனித தந்த தாது இன்றைக்கு தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக காட்சிப்படுத்தப்படுகின்றது.
நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனைப் தரிசிப்பதற்காக நாட்கணக்கில் வரிசையில் காத்திருந்து, தரிசித்துச் செல்கின்றனர்.
பணம் அறவீடு
இந்நிலையில் அவ்வாறு வரிசைகளில் காத்திருக்காது இலகுவான முறையில் தந்த தாதுவைத் தரிசிப்பதற்காக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பௌத்த பீடங்களின் முகவர்கள் ஊடாக பெரும் தொகைப் பணம் அறவிடப்படுவதாக வெளிநாட்டில் வசிக்கும் முன்னணி ஊடகவியலாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
அவ்வாறு வரிசைகளில் காத்திருக்காது புனித தந்த தாதுவைத் தரிசிப்பதற்கு ஒரு நபருக்கு ஐயாயிரம் தொடக்கம் 20 ஆயிரம் ரூபா வரை அறவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த மோசடியில் ஈடுபடும் வாகனங்களின் இலக்கங்கள் உள்ளிட்ட முழு விபரமும் ஆதாரங்கள் சகிதம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காவேரியின் கர்ப்பத்தை விஜய் அறியும் உணர்வு பூர்வமான தருணம்.. மகாநதி சீரியல் எமோஷ்னல் புரொமோ Cineulagam

CSK மேட்ச் பார்க்க வந்தபோது அஜித் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. இத்தனை லட்சமா? Cineulagam

புதிய சீரியலில் நாயகனாக நடிக்கும் முத்தழகு சீரியல் நடிகர்.. யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam
