முழுமையாக முஸ்லிம் மக்கள் வாழும் கிராமம்! பௌத்த பிக்குகளால் எழுந்துள்ள அச்சம்

Trincomalee Sri Lanka Politician Sri Lankan political crisis Imran Maharoof
By Badurdeen Siyana Oct 07, 2023 08:37 PM GMT
Report

முஸ்லிம் மக்கள் வாழும் கிண்ணியா குரங்குபாஞ்சான் கிராமத்திற்கு பௌத்த பிக்குகள் விஜயம் செய்து அங்குள்ள பழைய இராணுவ முகாம் காணியை பார்வையிட்டுச் சென்றுள்ளமை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இன உறவை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என சம்பந்தப்பட்டோரை நான் கேட்டுக்கொள்கிறேன் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் பெண்ணை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையர்

ஐரோப்பாவில் பெண்ணை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையர்


முஸ்லிம் மக்களின் கிராமம்

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, கிண்ணியா பிரதேச செயலக பிரிவின் மஜீத்நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் குரங்குபாஞ்சான் கிராமம் உள்ளது. இது ஒரு விவசாயக் கிராமமாகும்.

முழுமையாக முஸ்லிம் மக்கள் வாழும் கிராமம்! பௌத்த பிக்குகளால் எழுந்துள்ள அச்சம் | Buddhist Monks Visit Kinnia Kurangupanjan Village

விடுதலைப்புலிகள் புரிந்துணர்வு உடன்படிக்கை காலப்பகுதியில் சர்வதேசம் வரை இக்கிராமம் பற்றி பேசப்பட்டுள்ளது.

இங்கு முழுமையாக முஸ்லிம்களே வாழ்ந்து வருகின்றனர். இங்கு இராணுவ முகாமொன்று இருந்து தற்போது இராணுவத்தினர் அகன்று சென்றுள்ளனர்.

இந்நிலையில் இராணுவ முகாம் அமைந்திருந்த இக்காணியை பௌத்த பிக்கு ஒருவர் தலைமையிலான குழுவினர் அண்மையில் பார்வையிட்டு சென்றுள்ளனர். இது அங்கு வாழும் மக்களிடையே சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பல்லாண்டு காலம் சுமூகமாக மக்கள் வாழ்ந்து வரும் பகுதியில் இவ்வாறு செயற்படுவது இன உறவைச் சீர்குலைக்கும் முயற்சியாக அமைந்து விடும்.

ஒத்துழைப்பு

எனவே, அதிகாரிகள் என்ற வகையில் கிண்ணியா பிரதேச செயலாளரும், திருகோணமலை அரசாங்க அதிபரும் இது தொடர்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்.

முழுமையாக முஸ்லிம் மக்கள் வாழும் கிராமம்! பௌத்த பிக்குகளால் எழுந்துள்ள அச்சம் | Buddhist Monks Visit Kinnia Kurangupanjan Village

அதேபோன்று கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் ஏ.எல்.அதாவுல்லா எம்.பியும், ஆளுங்கட்சி என்ற வகையில் கிண்ணியாவுக்கான ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும் இது விடயத்தில் கவனம் செலுத்தி உயர்மட்டத்தின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க நான் தயாராக இருக்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US