தென்னிலங்கையில் பெளத்த பிக்கு சுட்டுக் கொலை - சந்தேகநபர் கைது
மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு மீது துப்பாக்கிச் சூடு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தனமல்வில - ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிக்கு மீது துப்பாக்கிச் சூடு
ஜனவரி 23 ஆம் திகதி, கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹட்டன கனராம விகாரையில் பணிபுரிந்த கலப்பலுவ தம்மரதன தேரரை காரில் வந்த குழுவினர் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர்.
உயிரிழந்த பிக்கு 43 வயதுடைய கலபாலுவாவே தம்மரதன தேரர் என்பதுடன், காரில் வந்த நால்வரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையிலேயே கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |