கோவிட் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கட்டில்களை வழங்கிய வைத்தியர் புத்தி ஜயசிங்க
திருகோணமலை மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசமான கோமரங்கடவல பிரதேசத்தில் கோவிட் தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள குறைபாடுகளைப் போக்கும் முகமாக மாத்தறையைச் சேர்ந்த வைத்தியர் புத்தி ஜயசிங்க 13 கட்டில்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தனது முயற்சியாலும், தனது நண்பர்களுடன் இணைந்து இந்த வைத்தியசாலையின் குறைபாடுகளை நீக்கும் நோக்குடன் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தன்னை விட இந்த சமூகம் பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு இத்தகைய சேவையைச் செய்துள்ளோம்.
திருகோணமலை மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைபாடுகளை எதிர்காலத்தில் நண்பர்களுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளேன்.
பல இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த கட்டில்கள் எல்லோருக்கும் பயன்படப் போகிறது என்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
எதிர்காலத்தில் நோயாளர்களுக்கு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க அனைத்து வைத்தியர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையை அழகுபடுத்தும் நடவடிக்கையில் இவர் ஈடுபட்டு வருகின்றமையும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.
இவ்வைத்தியரை போன்று அனைத்து திணைக்கள அதிகாரிகளும் சிறந்த முறையில்
செயல்பட முன்வர வேண்டும் எனவும் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.








6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
