முல்லைத்தீவு பிள்ளையார் கோவிலில் புத்தர் சிலை

Sri Lankan Tamils Mullaitivu Sri Lanka
By Uky(ஊகி) Apr 07, 2024 04:45 PM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report
Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவில் பிள்ளையார் கோவிலாக இருந்த ஒரு வீதியோர வழிபாட்டிடத்தில் இப்போது பிள்ளையார் சிலையுடன் புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

சைவ வழிபாட்டிடங்களை பௌத்த வழிபாட்டிடங்களாக மாற்றி தமிழர் பூர்வீகமாக வாழ்ந்து வரும் இடங்களை சிங்கள மயமாக்கும் ஒர் செயற்பாடாகவே இதனை சமூக நோக்கு நிலையில் நோக்க வேண்டியுள்ளதாக சமூக விடய ஆய்வுகளில் ஈடுபட்டுவோர் குறிப்பிடுகின்றனர்.

நீராவியடிப் பிள்ளையார் கோவில் விடயத்தில் முரண்பட்ட நிலை நீதிமன்ற நடவடிக்கைக்குள்ளாகி அது தொடர்ந்து வரும் நிலையில் புல்மோட்டை முல்லைத்தீவு வீதிகளின் சந்திப்பில் உள்ள இந்த பிள்ளையார் ஆலயத்தில் சத்தமின்றி புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக மக்களிடேயே இது தொடர்பில் சுட்டிக்காட்டி கருத்துக் கேட்ட போது குறிப்பிட்டனர்.

இது தொடர்பில் விரிவாக ஆராய முற்பட்ட போது அரசியல் கட்சி சார்ந்த சிலரது அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள நேரிட்டது கவலையளிக்கும் விடயமாகும்.

பிள்ளையாரை கோவில் சந்தி 

முச்சந்தியாக அமையும் இந்தச் சந்தி புல்மோட்டை வீதி என அடையாளப்படுத்தும் B60 வீதியுடன் முல்லைத்தீவு வீதி இணைவதால் முச்சந்தியை ஆக்குகின்றது.

முல்லைத்தீவு பிள்ளையார் கோவிலில் புத்தர் சிலை | Buddha Statue Placed In Pilliyar Temple

போகஹ சந்தி 19 கிலோமிற்றர் தூரத்தில் இருப்பதாகவும் தென்னமரவடி 8.5 கிலோமீற்றர் தூரத்தில் இருப்பதாகவும் முல்லைத்தீவு 66 கிலோமீற்றர் தூரத்தில் இருப்பதாகவும் தூரங்காட்டி அறிவிப்புப் பலகையில் குறிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சந்தியில் உள்ள தூர இடங்காட்டியின் தரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதையும் கூர்ந்து அவதானிப்பதன் மூலமே இடங்களையும் அவற்றுக்கான தூரங்களையும் அவதானிக்க முடிகின்றது.

கிழக்குமாகாண எல்லையினுள் இந்தச் சந்தி அமைந்துள்ளது.

முன்னர் பிள்ளையார் கோவில் 

முன்னர் பிள்ளையாரை வைத்து வழிபட்டு வந்திருந்தனர்.அப்போது அந்த வழிபாட்டிடத்தில் புத்தர் சிலை இருக்கவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டதாக கூகுள் காட்டும் கூகுள் வீதிப் படங்களில் உள்ள தரவின் படி பிள்ளையார் மட்டும் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

முல்லைத்தீவு பிள்ளையார் கோவிலில் புத்தர் சிலை | Buddha Statue Placed In Pilliyar Temple

முல்லைத்தீவில் இருந்து புல்மோட்டைக்கு சென்று வரும் பலருடனும் இது தொடர்பில் மேற்கொண்ட தேடலிலும் இதே பதில்கள் பெறப்பட்டுள்ளது..

எப்போது புத்தர் சிலை வைக்கப்பட்டது என்பது தொடர்பில் சரியான தகவல்களை யாரிடமிருந்தும் பெற முடியாதது கவலைக்குரிய விடயமாகும்.

முன்னர் சிறிய மரமாக இருந்து இப்போது பெரிய மரமாக வளர்ந்துள்ள ஆலமரத்தின் கீழே பிள்ளையார் சிலையும் காணப்படுகிறது.

தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள்

தமிழ் மக்களின் அரசியல் நலன்களில் அக்கறை காட்டுவதற்காகவே தமிழ் அரசியல் கட்சிகள் செயற்பட்டு வருகின்றன.

நில ஆக்கிரமிப்பின் போது அவற்றைத் தடுத்து நிறுத்தி நிலம் காப்பதற்காக போராடும் அவர்கள் தமிழர் நிலங்கள் முழுமைக்கும் தங்கள் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதில் தோல்வியுற்று உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

முல்லைத்தீவு பிள்ளையார் கோவிலில் புத்தர் சிலை | Buddha Statue Placed In Pilliyar Temple

குறிப்பாக ஒவ்வொரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களும் தங்கள் பிரதேசங்கள் தொடர்பிலேயே கருத்தில் எடுக்கின்றனர். அப்படியாயின் அவர்களது அரசியல் கட்சித் தலைமை ஈழம் முழுவதற்குமான செயற்பாடுகளை கச்சிதமாக முன்னெடுக்க வேண்டும்.

எனினும் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு ஈழம் தொடர்பான ஈழத்தின் பாரம்பரியம், தமிழ் அரசியல் பழைமை மற்றும் புதுமைக்கு இடையிலான தொடர்பாடல் சிங்கள அரசியல் போக்கு என அரசியல் சார்ந்த புலமை குறைவாக இருப்பதாலேயே மாற்றங்கள் மெதுவாக ஏற்படுவதாக அரசியல் பாட ஆசிரியர் ஒருவர் கருத்துரைத்து இருந்தார்.

முல்லைத்தீவு புல்மோட்டை வீதியின் குறிப்பிட்ட சந்தியில் இனம் காணப்பட்டுள்ள இந்த விடயம் தொடர்பில் அரசியல் செயற்பாட்டாளர்கள் உண்மை நிலையினை ஆராய்ந்து பொருத்தமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 07 April, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, வடமராட்சி

17 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கொழும்பு, கோப்பாய் மத்தி

17 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US