சட்டத்தரணிகள் சங்கத்தலைவருக்கு எதிரான ஆளும் கட்சியின் குற்றச்சாட்டுகள்! அரசுக்கு விடுத்துள்ள சவால்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக ஆளும் கட்சி முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனவும் தைரியம் இருந்தால் அவற்றை நாடாளுமன்றத்துக்கு வெளியே பகிரங்கமாக கூறுமாறும் முன்னாள் எம்.பி. பிரேம்நாத் சி. தொலவத்த சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று (25.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்டத்தரணிகள் சங்கத்தின் எதிர்ப்பு
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசின் முன்மொழிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக்கொண்டு, மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காகவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இவ்வாறு செயற்படுகின்றார் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரால் நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இத்தகையக் கூற்றுக்கள் மிகவும் வேடிக்கையானவை. நீதியரசர்களின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் நடவடிக்கைக்கான எதிர்ப்பானது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவரின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல.
மாறாக, களுத்துறை, கொழும்பு உள்ளிட்ட பிராந்திய சட்டத்தரணிகள் சங்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த சட்டச் சமூகமும் ஒன்றிணைந்தே இதற்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.
அரசியல் உள்நோக்கம்
அத்துடன், அரசின் இந்தத் தீர்மானத்துக்கு நீதிபதிகள் சங்கமும் உத்தியோகபூர்வமாக எதிர்ப்பைப் பதிவிட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடவே எதிர்ப்பை வெளியிடுகின்றார் என்றால், நீதிபதிகள் சங்கத்தில் உள்ள எந்த நீதிபதி பதவி விலகி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போகின்றார்?

நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு பொய்களைப் பரப்பாமல், இந்தக் குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத்துக்கு வெளியே பகிரங்கமாகக் கூறுமாறு நான் சவால் விடுக்கின்றேன்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பிராந்திய சட்டத்தரணிகள் சங்கங்கள் மற்றும் சர்வதேச சுயாதீன அமைப்புகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கத்துக்காக அன்றி, நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதித்துறைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகவே குரல் கொடுத்து வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னார் வாழ்க்கை பெற்றான் கண்டல் புனித நீக்கிலார் ஆலய நுழைவாயில் - அலங்கார வளைவு - புதிய மணிக்கோபுரம் திறந்து வைப்பு
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan