நாமலை பிச்சைக்காரருடன் ஒப்பிட்ட கம்மன்பில.. 800,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடையா!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பெற்றதாகக் கூறப்படும் தொகையை பிச்சைக்காரனுக்கு வழங்கும் பணத்துடன் ஒப்பிட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நிராகரித்துள்ளார்.
அரசியல் விடயம் தொடர்பில் பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொள்வதை பிச்சைக்காரனுக்கு பணம் கொடுப்பதுடன் ஒப்பிட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அவ்வாறு பார்த்தால் நாமல் ராஜபக்ச ஒரு பிச்சைக்காரராகவே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், இவ்வாறான ஒப்பீட்டை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.
800,000 அமெரிக்க டொலர்..
பிச்சைக்காரருக்கு பணம் கொடுப்பதற்கும் அரசியல்வாதிக்கு பணம் கொடுப்பதற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளதுடன், அரசியல்வாதிகள் எவ்வாறு பணம் சம்பாதித்தார்கள் என்பதை நாட்டு மக்கள் அறிவர் என்பதால் கம்மன்பிலவின் தர்க்கத்தையே கேள்விக்குட்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் Gen Z தலைமுறையினர் ஆதரவாக இருப்பதாகவும், நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு தற்போதைய அரசாங்கத்தால் தொடரப்படவில்லை மாறாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் போதே தாக்கல் செய்யப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த கம்மன்பில, தொழிலதிபர் நிமல் பெரேராவினால் நாமல் ராஜபக்சவுக்கு 800,000 அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தொகையை எவ்வாறு தரகு எனக் கூற முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், நன்கொடைகளைப் பெறுவது சட்டவிரோதம் என்றால் வீதியிலுள்ள பிச்சைக்காரர் கூட சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என வாதிட்டிருந்தமைக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு
AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள் Cineulagam
அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்? News Lankasri