பெண்ணொருவரை கொடூரமாக கொலை செய்து வீட்டில் கொள்ளை
யக்கல, பிட்டவல்கொட பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் தாய் ஒருவரை கொலை செய்து விட்டு பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
5 பிள்ளைகளின் தாயான 78 வயதுடைய தாயை கொலை செய்து விட்டு தங்கம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொாலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் மற்றும் வீட்டில் இருந்த மற்றுமொரு பெண்ணின் கைகளை துணியால் கட்டி வாயில் துணியை வைத்து இறுக்கியுள்ளனர். இதனால் ஆபத்தான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வயோதிப பெண் உயிரிந்துள்ளார்.
உயிரிழந்த தாய் மற்றும் அவரது உதவிக்காக பெண் ஒருவர் தங்கியிருந்துள்ளார். திடீரென நுழைந்த கொள்ளையர்கள் இருவர் இவ்வாறு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகையின் பெறுமதி இதுவரையில் மதிப்பிடப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri