கொழும்பில் பெண் ஒருவரின் மோசமான செயல்! தனியே தவித்து நின்ற 14 வயது சிறுமி
கொழும்பில் தனது தங்கையை தனியே விட்டுவிட்டு காதலனுடன் பெண் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
பேருந்து நிலையத்தில் தனது தங்கையை தனியே விட்டு விட்டு குறித்த பெண் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது 14 வயது சகோதரியுடன் கடந்த 21ஆம் திகதி வெலிகமவில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்துள்ளார்.
பின்னர் சிறுமியான தனது சகோதரியை கொழும்பு கோட்டையில் விட்டுவிட்டு தனது காதலனுடன் அந்த தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சகோதரியால் கைவிடப்பட்ட 14 வயது சிறுமி கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் அழுது கொண்டிருந்த போது பொலிஸார் அவரை மீட்டுள்ளனர்.
சகோதரிகள் இருவரும் வெலிகம, இப்பாவல பகுதியில் உள்ள வறுமையான பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் வாழ்க்கையில் முதல் தடவையாக கடந்த 21 ஆம் திகதி கொழும்பு வந்ததாகவும் குறித்த சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த 23 வயதுடைய சகோதரி தனது தாயிடம் வெலிகமவிற்கு மருந்து வாங்குவற்கு செல்வதாக கூறி பணம் கேட்டு 14 வயது தங்கையுடன் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிகமவில் இருந்து குறித்த இருவரும் கொழும்பு - மாத்தறை பேருந்து ஒன்றில் கொழும்பிற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு வந்தவுடன் சகோதரியின் தொலைபேசிக்கு காதலனிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. பின்னர் அவர் தனது 14 வயது சகோதரியை அழைத்து 1000 ரூபாயை கொடுத்துவிட்டு மாத்தறை பேருந்தில் வெலிகமவில் உள்ள தனது வீட்டிற்கு செல்லுமாறு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சிறுமியை பொலிஸார் அரவது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan