குடும்பத் தகராறில் தம்பியை வாளால் வெட்டிய அண்ணன்
கம்பஹா, கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற குடும்பத் தகராறு ஒன்றின் போது, அண்ணா தனது தம்பியை வாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(16.5.2026) கந்தானை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அண்ணன் மற்றும் தம்பி ஆகிய இருவருக்கும் இடையே நீண்ட காலமாகத் தகராறு நிலவி வந்ததாகக் கூறப்படுகின்றது.
கைது
இந்தநிலையில், நேற்று ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த அண்ணன் தம்பியை வாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மூன்று பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய அண்ணனைக் கந்தானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.