மாத்தளையில் அடித்து உடைக்கப்பட்ட வீடு! நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம் (Video)
மாத்தளையில் வீடொன்று அடித்து உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவரை கைது செய்யுமாறு கோரி நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளை - எல்கடுவ பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றின் வீட்டை முகாமையாளர் ஒருவர் அடித்து உடைக்கும் காணொளி ஒன்று அண்மையில் வெளியாகியிருந்தது.
வீடு அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு கடந்த 19.08.2023 அன்று தனது அதிகாரிகள் சகிதம் சென்ற உதவி முகாமையாளர், குடியிருப்பை உடைத்து பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்
இவ்வாறான சூழலிலேயே இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானதையடுத்து நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது எதிர்க்கட்சியின் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தை கைவிடுமாறு சபாநாயகர் கோரிய போதும் அந்த கோரிக்கையை புறக்கணித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |