ஏறாவூரில் நிலத்தை தோண்டும் போது பழுதடைந்த கைத்துப்பாக்கி - வாள் மீட்பு
ஏறாவூர் பகுதியில் வீடு கட்டுவதற்காக காணி தோண்டியபோது, நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த கைத்துப்பாக்கி போன்ற ஆயுதம் மற்றும் வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிச்சிநகர் ரெட்பானா வீதியில் அமைந்துள்ள காணி ஒன்றில் நேற்று(20) பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் அத்திராம் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது, மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
இதையடுத்து, காணி உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற இலங்கை பொலிஸ் அதிகாரிகள், பழுதடைந்த கைத்துப்பாக்கி போன்ற ஆயுதம் மற்றும் வாளை மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
