பிரித்தானியாவில் ரயில்வே பணியாளர்கள் வேலை நிறுத்தம் - பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு
பிரித்தானியாவில் வார இறுதி நாட்களில் ரயில்வே பணியாளர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக ரயில் பயணங்களை தவிரக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரித்தானிய மகாராணியின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் காரணமாக வங்கி விடுமுறை வார இறுதியில் சேவைகளில் குறிப்பிடத்தக்க இடையூறு ஏற்படும் என்று ரயில் பயணிகள் எச்சரிக்கப்படுகிறார்கள்.
TransPennine Express (TPE) இல் உள்ள ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து (RMT) தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் மத்தியில் ஊதியம் தொடர்பான நீண்டகால சர்ச்சை காரணமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ℹ️ RMT Strike action and TRU engineering works will continue over the #JubileeBankHoliday weekend. We will be running an amended timetable with limited services available, so our advice is not to travel. Please check here for more information: https://t.co/rJa7wGYzae pic.twitter.com/VHvP7n0slC
— TransPennine Express (@TPExpressTrains) June 2, 2022
மாற்று போக்குவரத்தை நாடுமாறு கோரிக்கை
இதனால், வார இறுதி நாட்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று TransPennine Express (TPE)மக்களை வலியுறுத்தியது. இதனால் அத்தியாவசிய பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு மிகக் குறைந்த சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வார இறுதி நாட்களில் ஜூபிலி கொண்டாட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்லும் மக்கள் மாற்று போக்குவரத்தை நாடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தங்கள், பிரித்தானியா முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெறும், அத்தகைய சிறப்பான வார இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவையை வழங்க முடியாமல் போவதாக TransPennine Express இன் இயக்குனரான Kathryn O'Brien தெரிவித்துள்ளார்.
"சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களிலும் வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்டுள்ளது, இதனால் வாடிக்கையாளர்கள் ரயிலில் பயணம் செய்வதை தவிர்க்குமாறும், மாற்று போக்குவரத்தை நாட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.