ஜேர்மனியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரண்டது! 30 பேர் காயம்
பயணிகளில் பெரும்பாலான மாணவர்கள்
ஜேர்மனியின் தென்கிழக்கு மாநிலமான பவேரியாவில் தொடரூந்து ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது நான்கு பேர் பலியாகினர்.
சுமார் 30 பேர் காயமடைந்தனர். இந்த தொடருந்தில் பெரும்பாலான மாணவர்கள் பயணம் செய்துள்ளனர்.
காரணம் இன்னும் தெரியவில்லை
விபத்துக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 13:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் 15 பேர் உள்ளூர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தரப்பினர் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கவில்லை என்று நம்பப்படும் நிலையில், தொழில்நுட்ப பிரச்சினையே விபத்துக்கான காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஒஸ்திரியாவில் இருந்து மீட்பு உலங்கு வானுார்திகள்
ஒஸ்திரியாவில் இருந்து உலங்கு வானுார்திகள் மீட்பு முயற்சிகளுக்கு உதவ சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
நவீன காலத்தில் ஜேர்மனியில் இடம்பெற்ற மிக மோசமான தொடரூந்து விபத்து 1998 இல் லோயர் சாக்சனியில் உள்ள எஸ்கெட் என்ற இடத்தில் இடம்பெற்றது. இதன்போது 101 பேர் கொல்லப்பட்டனர்.