தமக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்காத மகாராணி எலிசபெத்!
பிரித்தானிய மகாராணியின் 70 ஆண்டு சேவைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் அரச குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
பிரித்தானிய மகாராணியின் 70 ஆண்டு சேவையை பாராட்டி “பிளாட்டினம் ஜூபிலி” நிகழ்வை முன்னிட்டு அந்த நாட்டில் நான்கு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரியில், நீண்ட காலம் பணியாற்றிய பிரித்தானிய மகாராணியாக இரண்டாம் எலிசபெத் பதிவு பெற்றார்.
இரண்டாவது எலிசபெத் மகாராணி 1952 ஆம் ஆண்டு முதல் அரசாட்சியில் இருந்து வருகிறார். அவர் பொதுநலவாய அமைப்பின் 15 நாடுகளுக்கு அரச தலைவராகவும் உள்ளார்.
இந்தநிலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில், மன்னர் இல்லாத நிலையில் எலிசபெத் மகாராணி, வின்ட்சர் கோட்டையில் தங்கியிருந்து இந்த நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்த்ததாக நம்பப்படுகிறது.
நிகழ்வில் இங்கிலாந்தின் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது மனைவி கேரி உட்பட பல அரசியல்வாதிகள் பங்கேற்றனர்.
போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது மனைவி கேரி.
இளவரசர் ஹரி மற்றும் மேகன்
இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத்தரின்
இளவரசர் சார்ல்ஸ் மற்றும் மனைவி கமீலா
வாழ்த்துப்பாடல்
ஒன்று கூடல்
நிகழ்வு முடிந்த பின்னர் அனைவரும் வெளியேறும் காட்சி