பதவி விலகினார் ரிஷி சுனக்
பிரித்தானியாவின் பிரதமர் பதவியிலிருந்து ரிஷி சுனக் விலகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் அரச மாளிகையான பக்கிங்ஹாம் மாளிகை இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் சுனக் தலைமையிலான கொன்சர்வேட்டிவ் கட்சி பாரிய தோல்வியை சந்தித்துள்ளது.
கொன்சர்வேட்டிவ் கட்சி
இதன்படி 650 நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றில் கொன்சர்வேட்டிவ் கட்சி 121 ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொண்டுள்ளது.
கடந்த தேர்தலுடன் ஒப்பீடு செய்யும் போது கொன்சர்வேட்டிவ் கட்சி 250 ஆசனங்களை இழந்துள்ளது.
பதவி விலகுவது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நோக்கில் சுனக், பிரித்தானிய அரச மாளிகைக்கு சென்றுள்ளதாக செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இரண்டாண்டு கால இடைவெளி
கடந்த இரண்டாண்டு கால இடைவெளியில் பதவி வகிக்கும் நான்காவது பிரதமராக ஸ்டார்மர் பதவி ஏற்க உள்ளார்.
இதன்படி மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், ஆட்சியின் மீதான ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளதாக சுனக் தெரிவித்துள்ளார்.
மேலும், கொன்சேர்வட்டிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் விரைவில் விலக உள்ளதாக சுனக் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |