இலங்கையில் தேடப்படும் பிரித்தானிய பெண் - மக்களிடம் உதவி கோரும் பொலிஸ்
காலி முகத்திடல் போராட்டத்தின் போது சமூக ஊடகங்களில் செயற்பட்ட பிரித்தானிய பிரஜையான Kayleigh Fraser என்பவரை கண்டுபிடிப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று விசா நிபந்தனைகளை மீறியதாக கூறி கடவுசீட்டை பறிமுதல் செய்தனர்.

ஓகஸ்ட் 15ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட இந்த வெளிநாட்டுப் பெண், தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள், அவரைக் கண்டுபிடிப்பதில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இதன்போது, அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அவர் அதிகாரிகளிடம் வருவார் என நம்பப்படுகின்றது.
மேலும், அவர் எந்த வகையிலும் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனவும் குடிவரவு அதிகாரிகளிடம் இருந்து தப்பித்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan