பிரித்தானிய பிரதமரின் முடிவு! கோட்டாபயவிற்கு முக்கிய தகவல்கள் பல
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் பழமைவாத கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இருப்பினும் புதிய பிரதமர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அமைச்சரவை தகுதி அமைச்சர்களில் முக்கியமான நான்கு பேர் பதவி விலகுவதாக அறிவித்ததன் பின்னர் அதன் அழுத்தம் காரணமாகவே பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவி விலகியதாக அரசியல் விமர்சகர் சிவகுரு பிரேம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் போரிஸ் ஜோன்சனின் பதவி விலகலை அடுத்து இந்த கட்சியில் கடும் தலைமைத்துவ போட்டி ஒன்று நிலவும்.
இதேவேளை ஒரு கட்சியை கட்டுகோப்பாக நடத்த தெரியாததால் தான் போரிஸ் ஜோன்சன் தலைமைத்துவ நெருக்கடிக்குள் சிக்கி தற்போது பதவி விலகியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
போரிஸ் ஜோன்சனின் கடந்தகால தவறுகளுக்கான பலனாக தான் இந்த பதவி விலகலை பார்க்க முடிகின்றது. காரணம் கோவிட் தொற்று பேரிடர் காலத்தில் பிரிட்டனில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அறிவிப்புகளும் மக்களை மிகுந்த இன்னல்களுக்குள்ளாக்கியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படடன.
இதை ஒரு கொள்கை சார்ந்த பிரச்சினையாக பார்க்க முடியாது. மாறாக பிரதமருக்கு கீழ் பணியாற்ற முடியாது என்பதற்கான எதிர்வினைகளாகவே அமைகின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam