உக்ரைனில் சிறைபிடிக்கப்பட்ட இரண்டு பிரித்தானிய போராளிகள் மரண தண்டனையை எதிர்கொள்கின்றனர்
உக்ரைனுக்காக போராடிய இரு பிரித்தானிய படையினர் இன்று புடின் சார்பு பிரிவினைவாதிகளின் கைகளில் மரண தண்டனையை எதிர்கொள்கின்றனர்.
சிறைபிடிக்கப்பட்ட 48 வயதான ஷான் பின்னர் மற்றும் 35 வயதான ஆண்ட்ரூ ஹில் ஆகியோர் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசில் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
பிரித்தானியாவிடம் இருந்து சலுகைகளைஅதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ரஷ்ய சார்புடையவர்கள் விசாரணையை நடத்துவார்கள் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், புட்டின் சார்பு பிராந்தியத்திற்கு எதிராக போர் நடவடிக்கைகளை நடத்தியதற்காக அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியர்களான ஷான் பின்னர் மற்றும் ஆண்ட்ரூ ஹில் ஆகியோரின் விரிவான சாட்சியங்கள் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் சட்டத்தரணி ஜெனரல் அலுவலக அதிகாரிகளால் பெறப்பட்டன.
சட்டவிரோத செயல்களில் அவர்களின் ஈடுபாடு நிறுவப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ஜெனரலின் அதிகாரி விக்டர் கவ்ரிலோவ் ஒரு காணொளியில் தெரிவித்துள்ளார்.
டொனெட்ஸ்க் மக்கள் குடியரசுக்கு எதிரான போர் நடவடிக்கைகளைத் தயாரித்து நடத்துவதில் ஈடுபட்டுள்ள கூலிப்படையினருக்கு எதிரான குற்றவியல் வழக்கு முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் தகுதியின் அடிப்படையில் வழக்குப் பொருட்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக குற்றம் சுமத்தப்பட்டவருக்கு போர்க்கால நிலைமைகளில் மரண தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
