கெய்ர் ஸ்டார்மர் ஆட்சி காலத்தில் அதிகளவான செல்வந்தர்களை இழக்கவுள்ள பிரித்தானியா
உலகின் மிகப்பாரிய செல்வ மேலாண்மை நிறுவனமொன்றின் பகுப்பாய்வின்படி, 2028 ஆம் ஆண்டுக்குள் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அதிக மில்லியனர்களை பிரித்தானியா இழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாற்றங்கள் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியற்றுள்ள கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) ஆட்சிக்காலத்தில் நிகழவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மில்லியனர்களின் எண்ணிக்கை
அண்மையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், 2023 இல் 3.062 மில்லியனர்களாக இருந்த பிரித்தானியர்கள் 2028 இல் 2.542 மில்லியனர்களாக17 சதவீதம் குறையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், நெதர்லாந்தும் 2028-ஆம் ஆண்டில் அதன் மில்லியனர்களில் 4 சதவீதத்தை இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதே காலக்கட்டத்தில் 56 நாடுகளில், 52 நாடுகளில் மில்லியனர்களின் எண்ணிக்கை உயரும் என்று குறித்த செல்வ மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில், தைவான் மில்லியனர்களில் மிகப்பாரிய வளர்ச்சியை அனுபவிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2023இல் 789,000 ஆகியிருந்த மில்லியனர் எண்ணிக்கை, 47 சதவீதம் அதிகரித்து 2028இல் 1.158 மில்லியனாக அதிகரிக்குமென கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |