பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்த இந்திய வம்சாவளி பெண்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவர் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
இதன்போது, லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் இருந்து சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 29 வயதுடைய ஷிவானி ராஜா என்ற பெண்ணே இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
இவர் லண்டன் முன்னாள் துணை மேயர் ராஜேஷ் அகர்வாலை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
சத்தியப்பிரமாணம்
லீசெஸ்டர் கிழக்கு இருக்கை உண்மையில் தொழிலாளர் கட்சிக்கு ஒரு முக்கிய இடமாகும்.
எனினும், ஷிவானி ராஜா மூலம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பழமைவாத கட்சி அந்த இடத்தைப் பிடித்துள்ளது.
பதவியேற்பு நேரத்தில் இவர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
லெய்செஸ்டர் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துவதை பெருமையாக உணர்கிறேன் என்று கூறிய அவர், பிரித்தானிய பேரரசரின் உத்தரவுப்படி செயல்படுவேன் என்று பகவத் கீதை மீது சத்தியம் செய்து கொண்டுள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான ஷிவானி ராஜா குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் அவரது பெற்றோர் 1970ஆம் ஆண்டுகளில் கென்யாவிலிருந்து லெய்செஸ்டருக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
அத்துடன்,இவர் டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பார்மசி மற்றும் காஸ்மெடிக் சயின்ஸ் கற்கைகளை பயின்றுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
|