பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயர் காலமானார்
பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயர் என்ற பெருமைக்குரிய மஞ்சுளா சூட் (வயது 80), லெய்செஸ்டர் நகரில் காலமானார்.
லெய்செஸ்டர் நகரின் ஸ்டோனிகேட் வட்டார உறுப்பினராகவும், உதவி மேயராகவும் நீண்ட காலம் பணியாற்றிய அவர், அந்தச் சமூகத்திற்கு ஆற்றிய தன்னலமற்ற சேவைகளுக்காகப் பெரிதும் மதிக்கப்படுபவராவார்.
1970-களில் இந்தியாவிலிருந்து லெய்செஸ்டர் பகுதிக்கு வந்த மஞ்சுளா, ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் தனது கணவர் போலின் மறைவுக்குப் பிறகு அரசியலில் நுழைந்தார்.
முதல் ஆசியப் பெண்
1996 ஆம் ஆண்டில் நகரின் முதல் இந்துப் பெண் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2008 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயராகப் பொறுப்பேற்று வரலாறு படைத்தார்.

மஞ்சுளா சூட்டின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
லெய்செஸ்டர் தெற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஷோகட் ஆடம், மஞ்சுளாவிடம் தான் கல்வி கற்ற நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன், "அவர் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையைத் தனது அன்பால் மாற்றியவர்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
பஞ்சாப்பின் லூதியானா மாவட்டத்திலிருந்து வந்து பிரித்தானியாவை தனது தாய்நாடாக ஏற்றுக்கொண்ட மஞ்சுளா, தனது கடின உழைப்பால் பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
திறப்பு விழா நாளில் ஜனனிக்கு ஏற்பட்ட நெருக்கடி, எப்படி சமாளிக்க போகிறார்.... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam