சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கியது பிரித்தானியா!
கோவிட் தொற்று ஆபத்து காணப்படும் சிவப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகளை பிரித்தானியா நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முடிவு செப்டம்பர் 22 முதல் அமுலுக்கு வரும் என்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், மாலைத்தீவு, எகிப்து, கென்யா, ஓமன் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சிவப்பு பட்டியலில் இருந்து பிரித்தானியா நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22ம் திகதி முதல் குறித்த எட்டு நாடுகள் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் அறிவித்துள்ளார்.
பிரித்தானியா வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட சர்வதேச பயண போக்குவரத்து ஒளி அமைப்பின்படி, துருக்கி போன்ற இடங்களிலிருந்து வரும் மக்கள் இனி ஹோட்டல் தனிமைப்படுத்தலில் தங்க வேண்டியதில்லை.
அத்துடன், இங்கிலாந்து திரும்பும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு பிசிஆர் சோதனைகள் தேவைப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, தடுப்பூசியின் இரண்டு அளவுகளை பெற்றுக்கொண்டவர்கள் சிவப்பு பட்டியலில் இல்லாத எந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பும் புறப்படும் முன் சோதனை செய்திருக்கவேண்டியதில்லை.
இதனிடையே, பயணம் ஒரு பரவலாக்கப்பட்ட விடயம் என்ற போதிலும், ஸ்காட்டிஷ், வேல்ஷ் மற்றும் வடக்கு ஐரிஷ் அரசாங்கங்கள் தொற்றுநோய்களின் போது இங்கிலாந்து அரசாங்கத்தின் விதிகளைப் பின்பற்றுகின்றன.
இதன்படி, துருக்கி, பாகிஸ்தான், மாலைத்தீவு, எகிப்து, இலங்கை, ஓமன், பங்களாதேஷ் மற்றும் கென்யாவை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்குவதில் இங்கிலாந்தைப் பின்பற்றுவதாக வேல்ஸ் கூறியுள்ளது.
புதிய பயண விதிகள் "குறைந்தபட்சம் புத்தாண்டு வரை" அமுலில் இருக்கும் என்று போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் மேலும் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த முடிவை சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் விமானத் துறையில் உள்ள நிறுவனங்கள் வரவேற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri