சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரித்தானியா - பிரான்ஸ் கூட்டு உடன்படிக்கை
சட்டவிரோத குடியேறிகள் இங்கிலாந்து கால்வாயைக் கடப்பதைத் தடுப்பதற்காக, பிரான்ஸ் நாட்டுடன் 662 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான புதிய மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த உடன்படிக்கையின்படி, கடற்கரைகளில் ஏற்படக்கூடிய வன்முறை மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக, கலகத் தடுப்புப் பயிற்சியினைப் பெற்ற 50 பிரான்ஸ் பொலிஸார் விசேடமாகப் பணியமர்த்தப்பட உள்ளனர்.
அத்துடன், ஆளில்லா விமானங்கள், உலங்குவானூர்திகள் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு கெமராக்களைப் பயன்படுத்தி மனிதக் கடத்தல்காரர்களைக் கண்டறியவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
கடுமையான நிபந்தனை
முதன்முறையாக, பிரான்ஸ் போதிய அளவு படகுப் பயணங்களைத் தடுக்கத் தவறினால், சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் நிதியைத் திரும்பப் பெறும் அல்லது வேறு பணிகளுக்கு மாற்றும் புதிய நிபந்தனையையும் இங்கிலாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் கோடைகாலத்தில் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 42 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 1,100 அதிகாரிகள் இப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
எவ்வாறாயினும், எவ்விதக் கடுமையான நிபந்தனைகளும் இன்றி பெரும் தொகை வரிப்பணம் பிரான்ஸிடம் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளனர்.
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
பாதுகாப்பான பயண வழி
கடந்த 2025 ஆம் ஆண்டில் சுமார் 41,472 பேர் சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவிற்கு வந்துள்ள நிலையில், 2026ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை ஏற்கனவே 6,000-ஐ கடந்துள்ளது.

மனித உரிமை அமைப்புகள் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளதுடன், பாதுகாப்பான பயண வழிகளை உருவாக்குவதே உயிரிழப்புகளைத் தடுக்க ஒரே வழி என வலியுறுத்தியுள்ளன.
இருப்பினும், மனிதக் கடத்தல் கும்பல்களை ஒழிப்பதற்கும், ஆபத்தான கடல் பயணங்களைக் குறைப்பதற்கும் இந்த இராஜதந்திர நகர்வு மிகவும் அவசியம் என பிரித்தானியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam