46 வருடங்களாக புனரமைக்கப்படாத பாலம் : உடைந்து விழும் நிலையில் மக்கள் போராட்டம்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதி ஏ-9 வீதியில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த இரும்பு பாலம் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் குறித்த பாலத்தை திருத்தி தரும்படி இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று (07.08.2026) பாலத்தினுள் இடம்பெற்றுள்ளது.
பாலத்தின் அடித்தளங்கள்
1980 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட பாலம் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சேதமடைந்து விடுதலைப் புலிகளால் தற்காலிக பாலமாக அமைத்து நீண்ட காலமாக பாவனையில் இருந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் இராணுவத்தினரின் ஆளுமைக்குள் இருந்து குறித்த இடத்தை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பல போராட்டங்களை முன்னெடுத்த பின்னர் பகுதி பகுதியாக குறித்த பிரதேசத்தை 2018 ஆம் ஆண்டு மீட்டேடுத்தார்கள்.

அதன் பின்னர் மாவட்டத்துக்கு பல அபிவிருத்திகள் வந்தபோதும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பரவிப்பாஞ்சான் கிரமத்தின் வீதிகளை புறம் தள்ளப்பட்டு ஒதுக்கப்பட்டே காணப்பட்டுள்ளது.
தற்போது பாலத்தின் அடித்தளங்கள் பலவீனமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கைகள் இடம்பெறாத நிலையில் குறித்த பாலத்தை திருத்தி தரும்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி வந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிர் பயத்துடனேயே கடக்க வேண்டிய சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.


