மட்டக்களப்பு நகரில் தற்காலிக பாலம் இன்று திறந்துவைப்பு
மட்டக்களப்பு நகரில் அண்மையில் இடிந்துவீழ்ந்த புதுப்பாலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இந்த பாலம் உடைந்து வீழ்ந்த நிலையில் தற்காலிகமாக பாலம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தற்காலிக வீதி அமைக்கும் பணி
பாலம் உடைந்து வீழ்ந்ததை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கவனத்திற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து உடனடியாக பாலம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்காலிக வீதியினை அமைக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்திருந்த நிலையில் இந்த பணிகள் இன்று நிறைவுபெற்று வீதி பொதுமக்களின் பாவனைக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் நட.கதீசன்,நிறைவேற்று பணிப்பாளர் சு.கிருஸாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கனரக வாகனங்கள் பயணிக்க தடை
குறித்த பாலம் தற்காலிக பாலம் என்ற காரணத்தினால் வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு நகருக்குள் உள்ள பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் போக்குவரத்துகள் இலகுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam