இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு பணிப்பாளர் பதவி விலகல்
இலங்கையின் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கனிஷ்க விஜேரத்ன தமது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமைகள் மனுக்களின் விசாரணையை தொடர, உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, அவர் நீதிமன்றிலேயே பதவி விலகுவதற்கான உறுதியை வழங்கியுள்ளார்.
இந்த வழக்குகள் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று (07) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. எனினும், பதவி விலகுவதாக கனிஷ்க அறிவித்தமையால் மேலும் இடைக்கால உத்தரவு எதுவும் மனுதாரர்களால் கோரப்படவில்லை.
அரசியலமைப்பு சபை
முன்னதாக, விஜேரத்னவின் நியமனம், 2023ஆம் ஆண்டின் ஊழல் எதிர்ப்புச் சட்ட விதிகளுக்கு முரணானது மற்றும் தேவைக்கேற்ப உரிய நடைமுறைகளைப் பின்பற்றி செய்யப்படவில்லை என்ற அடிப்படையில் அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா மற்றும் அதன் தலைவர் புலஸ்தி ஹேவமன்ன, சிவில் செயற்பாட்டாளர் விதுர ரலபனாவே மற்றும் ஊடகவியலாளர் ருவானி நிவந்திகா பொன்சேகா ஆகியோர் தமது மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
மேலும், தெளிவற்ற வகையில் இந்த நியமனம் அமைந்துள்ளதாக அவர்கள் தமது மனுக்களில் குறிப்பிட்டிருந்தனர். முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் பேரில் விஜேரத்ன நியமிக்கப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
