பாணின் எடை குறைந்தால் 10 ஆயிரம் ரூபா தண்டம்
பாண் ஒன்றிற்கு தேவையான எடை இல்லாத பட்சத்தில் விற்பனையாளர்களுக்கு 10 ரூபா முதல் 10 ஆயிரம் ரூபா வரை தண்டப்பணம் அறிவிடப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.
பாண் ஒன்றின் எடையை நிர்ணயித்து நுகர்வோர் அதிகார சபை நேற்றையதினம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது.
எடை குறைந்தால் தண்டப்பணம்
இதன்படி, ஒரு இறாத்தல் பாண் ஒன்றின் எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், ஒரு இறாத்தல் பாணிற்கான நிகர எடையில் 13 கிராம் வித்தியாசம் மாத்திரமே காணப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரை இறாத்தல் பாண் ஒன்றின் எடை 225 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அரை இறாத்தல் பாணிற்கான நிகர எடையில் 9 கிராம் வித்தியாசம் மாத்திரமே காணப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த நடைமுறைக்கு ஏற்ப பாண் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வாறில்லாத பட்சத்தில் விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |