கொழும்பில் ஆயுத முனையில் யுவதியை கடத்த முயன்ற நபரால் பரபரப்பு
கொழும்பின் புறநகர் பகுதியில் காதல் உறவில் இருந்த யுவதி ஒருவரை, கார் ஒன்றில் வந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்த முயன்றதாகக் கூறப்படும் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலன் மற்றும் அவரது நண்பர் ஒருவரை நேற்று கைது செய்ததாக கஸ்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடத்த முயன்ற நபர்
பாதுக்கை, வட்டரெக்க மற்றும் ஹபரகட பகுதிகளைச் சேர்ந்த 30 வயதுடைய காதலன் மற்றும் 25 வயதுடைய அவரது நண்பர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான இந்த காதலன், மத்தேகொட - கிரிகம்பமுனுவ பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய யுவதியுடன் சுமார் 3 வருடங்களாக காதல் உறவில் இருந்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் இருவரும் பல சந்தர்ப்பங்களில் சந்தித்துள்ளனர். இந்த நிலையில் குறித்த நபர் திருமணமானவர் என்பதும் ஒரு பிள்ளையின் தந்தை என்பதும் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
விடயத்தை அறிந்த அவரது மனைவி, திருமணச் சான்றிதழ் உள்ளிட்ட பல தகவல்களை யுவதியின் உறவினர்களுக்கு அனுப்பி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து யுவதியின் பெற்றோரும் இந்தத் தொடர்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 8ஆம் திகதி காலை 8 மணியளவில் சந்தேக நபர் மற்றுமொரு நபருடன் கார் ஒன்றில் துப்பாக்கியுடன் யுவதியின் வீட்டிற்கு வந்து அவரை கடத்த முயன்றுள்ளார்.

யுவதியின் பெற்றோரும் உறவினர்களும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, இருவரும் காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் மத்தேகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அடுத்த 48 மணிநேரத்திற்குள் வலுவிழக்கும் குறைந்த காற்றழுத்தம்! கடும் மழைவீழ்ச்சி தொடர்பில் எச்சரிக்கை
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam