கபில சந்திரசேன இறுதியாக பேசிய வார்த்தைகள் - நெருங்கிய உறவினர்கள் வழங்கிய முக்கிய வாக்குமூலம்

CID - Sri Lanka Police Sri Lanka Police Colombo Supreme Court of Sri Lanka Kapila Chandrasena
By Dhayani May 13, 2026 01:45 PM GMT
Report

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து ( 08) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! சிக்கிய போலி ஆவணங்கள் - பொலிஸார் வெளியிட்ட தகவல்

குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! சிக்கிய போலி ஆவணங்கள் - பொலிஸார் வெளியிட்ட தகவல்

 

சாட்சியமளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் 

இந்த மோசடி தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பின்னணியில், கபில சந்திரசேன கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

கபில சந்திரசேன இறுதியாக பேசிய வார்த்தைகள் - நெருங்கிய உறவினர்கள் வழங்கிய முக்கிய வாக்குமூலம் | Kapila Chandrasena Death Inquest Aravinda De Silva 

கபில சந்திரசேனவின் மனைவியின் சகோதரியின் கணவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டிலேயே கபில சந்திரசேன சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது சாட்சியமளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா,

"கபில பிணையில் வருவதற்கு தேவையான ஆவணங்களை சரிசெய்ய நான் உதவினேன். மே 7ஆம் திகதி காலை எனக்கு அழைப்பு விடுத்து நன்றி கூறினார். அன்று மதியம் அவருக்கு மீண்டும் நீதிமன்ற பிரச்சினை இருப்பதாக கேள்விப்பட்டு, அவரை எமது வீட்டிற்கு வரச்சொன்னேன். அன்று இரவு அவர் தனது வீட்டுக்குச் சென்று மருந்துகள் மற்றும் 'ஜிம் மேட்' (Gym Mat) ஒன்றைக் கொண்டு வருமாறு தனது பணியாளரிடம் கூறிய நிலையில், எதற்காக ஜிம் மேட்?' என்று கேட்டபோது, உடைகளைத் தொங்கவிட அது தேவை என அவர் கூறினார்.

இரவு அவர் என்னிடம், 'நான் வெளியே வந்து ஒரு நாள் தான் ஆகிறது, மீண்டும் என்னை சிறையில் தள்ளப்பார்க்கிறார்களே' என்று கவலையுடன் கூறினார்.

மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் கதவைத் திறக்கவில்லை. சட்டத்தரணியுடன் சேர்ந்து கதவைத் திறந்து பார்த்தபோது, அறையில் கிடப்பதினை கண்டேன். மருத்துவர் வந்து அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார் என சாட்சியமளித்துள்ளார்.

மிகுந்த மன உளைச்சல்

இதன்போது சாட்சியமளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் மனைவி,

கபில இறப்பதற்கு முந்தைய இரவு மகிழ்ச்சியாக இருக்கவில்லை. எனது தங்கை மற்றும் பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றனர். கபில அமைதியான சுபாவம் கொண்டவர்.

கபில சந்திரசேன இறுதியாக பேசிய வார்த்தைகள் - நெருங்கிய உறவினர்கள் வழங்கிய முக்கிய வாக்குமூலம் | Kapila Chandrasena Death Inquest Aravinda De Silva 

மே 6 ஆம் திகதி அவர் பிணையில் வந்ததாகக்கூறி எமது வீட்டுக்கு தனியாக வந்தார்.மறுநாள் மாலை அவர் மீண்டும் எமது வீட்டுக்கு வந்தபோது ஒரு திறப்பை என்னிடம் கொடுத்து, தனது வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வந்துவிடுமாறு கூறினார்.

அன்று இரவு சட்டத்தரணிகளை சந்தித்துவிட்டு இரவு 10 மணிக்கு திரும்பினோம். கபில உணவருந்தவில்லை. இரவு 11 மணிக்கு அவர் உறங்கச்சென்றார். மறுநாள் காலை 7 மணியளவில் அவரது அறைக்கதவு திறக்கப்படாததால், 'மாற்று திறப்பு' மூலம் கதவைத் திறந்தோம். அவர் கட்டிலில் இருக்கவில்லை. அறையில் ஏதோ விபரீதம் நடந்துள்ளதை நான் உணர்ந்தேன். அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்" என சாட்சியமளித்துள்ளார்.    

இலங்கையில் 48 மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சல் மற்றும் சில அறிகுறிகள் நீடிப்பவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் 48 மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சல் மற்றும் சில அறிகுறிகள் நீடிப்பவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை - முதல் மரணம் பதிவு - நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை - முதல் மரணம் பதிவு - நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US