பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதாரத்துறையினர் பணி பகிஸ்கரிப்பு
சுகாதாரத் துறையில் 20ற்கும் மேற்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டணி தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்க போராட்டமொன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுளளது.கொடிய தொற்றுநோயிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு உறுதியான திட்டத்தின் கீழ், நீண்டகால வேலைத்திட்டம் அவசியம் என வலியுறுத்தியுள்ள, சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு, சுகாதார ஊழியர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நோக்கத்திற்காக சுகாதார சேவையை அணி திரட்டுவதற்கான 15 கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு மே 27ஆம் திகதி சுகாதார அமைச்சருக்கு அறிவித்ததோடு, ஜூன் முதலாம் முன்னர் தீர்வினையும் எதிர்பார்த்திருந்தது.
இந்நிலையில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிடின் தெரிவு செய்யப்பட்ட சில சுகாதார நிறுவனங்களில் ஜூன் 3ஆம் திகதி ஒரு அடையாள தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென, சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.சுகாதார அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.
இதற்கமைய, திருகோணமலை ,கிளிநொச்சி,முல்லைத்தீவு,மன்னார்,வவுனியா ,யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் (ஜூன் 03) காலை காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சேவையில் இருந்து விலகியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ,நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நண்பகல் 12 முதல் 12.30 மணி மௌனப் போராட்டத்தை நடத்தவும் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan