அவிசாவளையில் நீரில் மூழ்கி சிறுவன் பலி
அவிசாவளை (Avissawella) பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாச்சிமலை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் பண்டாரகமை (Bandaragama) பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவனொருவரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உயிரிழந்த சிறுவன்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த சிறுவன் தனது நண்பர்களுடன் நாச்சிமலை ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கும் போது சிறுவனும் அவரின் நண்பரொருவரும் திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.
இதன்போது, சிறுவனின் நண்பர் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை உயிரிழந்த சிறுவனின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
