நள்ளிரவில் இளைஞனின் உயிரை பறித்த நாய்
பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நாயுடன் மோதியதில் காயமடைந்த ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
நேற்று அதிகாலை 2.15 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மீகஹகிவுல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பதுலுஓயா, பகுதியை சேர்ந்த 26 வயதுடைய மிலிந்த மதுமல் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
இளைஞன் மரணம்
மீகஹகிவுல பகுதியில் இருந்து கரமெட்டியவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்த இளைஞர் மீகஹகிவுல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
விபத்து நடந்த இடத்திலேயே நாயும் உயிரிழந்ததாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிள் சிறிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
விபத்து குறித்து கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




