உழவு இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை (21-08-2026) சிறுவன் தனது உறவினரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியில் நின்றுக்கொண்டிருந்த போது தவறுதலாக வாகனத்தை இயக்கி திருப்ப முயன்ற போது சிறுவன் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
பொலிஸார் தீவிர விசாரணை
இதனையடுத்து உடனடியாக மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக உழவு இயந்திரத்தை இயக்கிய சாரதியை கைது செய்துள்ள கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த குழந்தையின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.