பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் எம்.பி பதவி விலகுவதாக அறிவிப்பு
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது எம்.பி பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் அவரது பதவி விலகல் ஏற்கப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்போது அவர் தனது அலுவலகத்தில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில்,நாடாளுமன்றத்தில் விட்டு வெளியேறுவது மிகவும் கஷ்டமாக உள்ளதாகவும், சிலருடைய குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரம் இல்லாமலும், குறைந்தபட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் ஒப்புதல் கூட இல்லாமலும் சிலரால் நான் கட்டாயப்படுத்தப்படுகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தனர் என்றும் தெரியவந்துள்ளதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |