பதவி விலகினார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன்
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் பழமைவாத கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
எனினும் புதிய பிரதமர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிக்கவுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் அவர் விசேட உரை ஒன்றை நிகழ்த்திய பின் இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கட்சி தலைமையில் இருந்து விலகும் அவர் இலையுதிர் காலம் வரை பிரதமராக நீடிப்பார் என்று பிபிசி தெரிவிக்கிறது.
இந்த கோடையில் கொன்சர்வேடிவ் தலைமைப் போட்டி நடைபெறும்.மேலும் அக்டோபரில் கட்சி மாநாட்டில் புதிய பிரதமர் தெரிவுசெய்யப்படவுள்ளார்.
பதவி விலகிய அமைச்சர்கள்

கட்சியின் துணை அமைப்பாளராக செயற்பட்டு வந்த கிறிஸ் பின்ஷர், கடந்த புதன்கிழமை இரவுநேர கேளிக்கை விடுதியில் இரண்டு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கிறிஸ் கட்சியின் துணை அமைப்பாளர் பதவியில் இருந்து விலகினார்.
போரிஸ் ஜோன்சன் மீது குற்றச்சாட்டு

எனினும் கிறிஸ் மீது பிரதமர் போரிஸ் ஜோன்சன் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நிதி அமைச்சர் ரிஷி சுனக் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித், சட்டத்துறை அமைச்சரான லாரா டிராட் குடும்ப நலத்துறை அமைச்சர் வில் குயின்ஸ் ஆகியோர் தங்களது பதவியை விட்டு விலகினர்.
அத்துடன், கோவிட் தொற்று பேரிடர் காலத்தில் பிரிட்டனில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அறிவிப்புகளும் மக்களை மிகுந்த இன்னல்களுக்குள்ளாக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
தடுப்பூசி செலுத்துதல், முகக்கவசம் அணிதல் போன்ற கோவிட் கட்டுப்பாடுகளில் போரிஸ் ஜான்சன் காட்டிய அலட்சியப் போக்கிற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.
கோவிட் கட்டுப்பாடுகளை மீறியதாக போரிஸ் ஜோன்சனுக்கு அபராதம் கூட விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய போரிஸ் ஜோன்சன் மேலும் பிரித்தானிய பிரதமர் பதவியையும் அவர் இராஜினாமா செய்வதாகக் கூறியுள்ளார்.
புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான கால அட்டவணை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam