போரதீவுப்பற்று பிரதேச சபைத் தவிசாளரின் நடவடிக்கைகள் : அதிருப்தியில் ஆளும் தரப்பு எம்.பி
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பிரஜா சக்தி தலைவர்களைத் தெரிவு செய்வது தொடர்பில் தவறான தகவல்களை ஊடகங்களில் பகிர்ந்திருந்தார் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கம் கொண்டு வரும் நல்ல திட்டங்களை எதிர்க்கின்றவர்களாக எதிர்க்கட்சியினரும், பிரதேசத்திலிருக்கின்ற முக்கிய பிரமுகர்களும் இருக்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சங்கர்புரம் கிராமத்தில் வீதிப் புனரமைப்பு பணிகளை நேற்றுமுன் தினம்(01.01.2026) ஆரம்பித்ததை தொடர்ந்து, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகளின் அறியாமை
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
”இது போன்று தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருந்தால் இந்த நாடு எப்போதும் முன்னேற்றப் பாதைக்குச் செல்ல முடியாது. சிறந்த திட்டங்களை ஆதரித்து அவற்றுள் சில குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சுட்டிக்காட்டி திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

இதை தவிர்த்து, அனைத்தையும் முற்றாக எதிர்ப்பதனால் பிரதேசத்திற்கு வருகின்ற நல்ல விடயங்கள் கூட தடுத்து நிறுத்தப்படும் நிலை உருவாக்கி விடும்.
இது போன்று இருப்பவர்கள், குறித்த விடயங்கள் தொடர்பில் தங்களுக்கு தெரிவிக்கவில்லையென்றால், அப்பகுதியில் உள்ள பிரதேச செயலகத்திற்கு சென்று, உரிய அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.
தற்போது அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கும், பிரஜா சக்தி தலைவர்களுக்கும் தெளிவுப்படுத்தியுள்ளோம்.
இப்படி இருக்கும் பட்சத்தில், பிரதேச சபைத் தவிசாளர் இவ்வாறான திட்டங்களை உதாசீனப்படுத்தி கருத்துக்களை வெளியிடுவது அந்த பிரதேசங்களுக்கு பொருந்தாது.

யுத்தம் முடிவடைந்த பின்னர், நாம் ஓரளவு முன்னேற்றத்தை கண்டுள்ளோம். அந்த சமயத்தில், கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளன. அப்போது அதனை தடுத்து நிறுத்தாதவர்கள் தற்போது நாம் செயற்படுத்துகின்ற நல்ல திட்டங்களை தடுப்பவர்களாக இருக்கின்றனர்.
அசமந்தப்போக்கு
இதுபோன்றவர்கள் தங்களின் ஆட்சியையும், அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையே நோக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் செயற்படுத்தும் நிதியை இந்த அரசாங்கம் வழங்கிக் கொண்டிருக்கிறது.

அவர் எதிர்வரும் காலங்களில் சபையைக் கொண்டு நடத்த முடியாத நிலை தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது.
அத்துடன், தவிசாளர் சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டம் கூட தோல்வியடைந்துள்ளது. இந்த விடயம் கூட அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.
இதுபோன்றவர்களுக்கு இனிவரும் காலங்களில் அதிகாரத்தை வழங்குவீர்களா என்பதை மக்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 22 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan