பூரு மூனா பொலிஸாரினால் கைது!
ரவிந்து சங்க என்றழைக்கப்படும் பூரு மூனா, நீதிமன்றத்தில் சரணடைய சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளை நீதவான் நீதிமன்றத்துக்கு சரணடையச் சென்றபோது, பொலிஸார் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவங்கள்
அண்மைக் காலமாக இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுக்காக தேடப்பட்டு வந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர், நீதிமன்றில் சரணடைவதற்காக சட்டத்தரணி ஒருவருடன் சென்றிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், சரணடைவதற்காக அவிசாவளை நீதவான் நீதிமன்றில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவே பொலிஸார் வாகனத்தை நிறுத்தி அவரை கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில் அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சமிந்த அத்துகோரள, அவரது உயிருக்கு உடனடி ஆபத்து இருப்பதாகவும் அவர் கொல்லப்படுவார் என அஞ்சுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
தனது தரப்பினருக்கு வாழ்வதற்கான உரிமை இருப்பதாக குறிப்பிட்ட சட்டத்தரணி, அவர் நீதிமன்றத்தில் சரணடைய விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து அவரை உடனடியாக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு
அவிசாவளை நீதவான் ஜனக சமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
